பிப்ரவரி மாதம் டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தின்போது, 53 பேர் கொல்லப்பட்டதோடு 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் கலவரம் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மீது மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் வைத்த குற்றச்சாட்டை டெல்லி காவல்துறையினர் மறுத்துள்ளனர்.