உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பத்து நாள்களுக்கு மேலாக டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்று ( ஆகஸ்ட் 24) அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிரணாப் உடல்நிலையில் முன்னேற்றமில்லை - பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை
டெல்லி: குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என ராணுவ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No change in Pranab Mukherjee's health: Hospital
அதில், "பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதனால் தொடர்ந்து அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து அவர் கோமா நிலையிலேயே இருக்கிறார். ஆனால் முக்கிய உடற்பாகங்கள் செயல் நிலையில் உள்ளன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.