முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு (84) கடந்த 10ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி கான்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து மருத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், பிரணாப் முகர்ஜிக்கு கரோனா தீநுண்மி தொற்று இருப்பது உறுதியானது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, பிரணாப் கோமா நிலையில் உள்ளார்.