மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு தேசியக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளனர். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக - சிவசேனா கூட்டணி தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், இன்று உள் துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
’காஷ்மீரில் ஒரு தோட்டா கூட பாயவில்லை’ - அமித் ஷா
காஷ்மீரில் ஒரு தோட்டா கூட துப்பாக்கியிலிருந்து வெளிவரவில்லை என உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி காஷ்மீரின் சிறப்புத் தகுதியை நீக்கியபோது, தற்போது கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்தன. ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் முடிவை வரவேற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. ராகுல் காந்தி, ’காஷ்மீரில் ரத்த ஆறு ஓடுகிறது’ என்று கூறினார். ஆனால் அங்கு ஒரு தோட்டா கூட துப்பாக்கியை விட்டு வெளிவரவில்லை என்பதே உண்மை” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2024 தேர்தலுக்கு முன் குடியுரிமை பெறாத மக்கள் வெளியேற்றப்படுவர் - அமித் ஷா