இது குறித்து துணை முதலமைச்சர் பிரஸ்டோன் டின்சோங் கூறுகையில், "மேகாலயாவில் இரண்டு மாவட்டங்களில் சில பன்றிகள் இறந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து, " 25 பன்றி மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பினோம். அவற்றில் எட்டு அறிக்கைகள் பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என வந்துள்ளது.
மீதமுள்ள மாதிரிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். மேலும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்க மேகாலயா அரசு பிற மாநிலங்களிலிருந்து பன்றிகளை வாங்குவதை தடை செய்ததுடன், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தையும் தடை செய்துள்ளோம்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் 2 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்ட பன்றிகள் இறந்துள்ளன. இதனை கருத்தில் கொண்டு மேகாலயா கால்நடைத் துறை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது.