சிறப்பு ரிசர்வ் போலீஸ் படை நியமனங்கள் தொடர்பாக திருநங்கைகளின் நலனுக்காக செயல்படும் சங்கமா இயக்கம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
அம்மனுவில், " மத்திய, மாநில அரசு நியமனங்கள் அனைத்திலும் திருநங்கைகளுக்கு உரிய இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய திருநங்கைகளுக்கு கல்வி நிறுவன சேர்க்கைகள், பொதுத் துறை நியமனங்கள் என அனைத்திலும் பின்தங்கிய வர்க்கமாக கருதி, இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய சட்ட சேவைகள் ஆணையம் தொடுத்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் சிறப்பு ரிசர்வ் காவல் படையில் நிரப்பப்படாமல் உள்ள 2,672 பணியிடங்களை நியமிப்பதற்கான விளம்பரங்களை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டிருந்தது.
இருப்பினும், அந்த விளம்பரத்தில் ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள் மட்டுமே பதவிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அனுமதித்துள்ளது.