தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்.எல்.சி. அனல்மின் நிலைய விபத்து: புதுச்சேரி முதலமைச்சர் இரங்கல் - புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி: நெய்வேலி என்.எல்.சி. அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி
நாராயணசாமி

By

Published : Jul 1, 2020, 8:28 PM IST

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 5ஆவது யூனிட்டில் உள்ள பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய பணியாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் விபத்து குறித்து புதுச்சேரி முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து கேட்டு அதிர்ச்சியடைந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கல்களை தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆறுதல் தெரிவித்து கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுபோல் விபத்து ஏற்பாடமல் இருக்க அனல்மின் நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு சாதனைகளை செய்து வந்தாலும் இது போன்ற விபத்துகள் நெய்வேலி அனல்மின் நிலையத்திற்கு ஒரு கருப்பு புள்ளியாக அமைந்துள்ளதாக நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details