புதுச்சேரி: நிவர் புயல் காரணமாக 10ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதுச்சேரியில் ஏற்றப்பட்டுள்ளது
புதுச்சேரியில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! - நிவர் புயல் புதுச்சேரி
நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நேற்று இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. மேலும், 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
![புதுச்சேரியில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு! நிவர் புயல் புதுச்சேரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9655798-thumbnail-3x2-nivar.jpg)
நிவர் புயல் புதுச்சேரி
இதனால் புதுச்சேரி நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. பேருந்துகள் நேற்று இரவு முதல் நிறுத்தப்பட்டதால் பேருந்து நிலையங்கள் பயணிகள் இன்றியும், பேருந்துகள் இன்றியும் வெறிச்சோடி காணப்படுகிறது.
புயலின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால், புதுச்சேரி பழைய துறைமுகத்தில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுவதால் அலைகளின் உயரம் 15 அடி வரை உயர்ந்து காணப்படுகிறது.