பாட்னா: பிகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது. இங்கு சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஆளும் தரப்பிலிருந்து 15 முக்கிய பிரமுகர்கள் கட்சி தாவியுள்ளனர். அவர்களில் தற்போதைய எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களும் உள்ளனர்.
அந்தத் தலைவர்கள் தாதன் சிங் யாதவ், முன்னாள் அமைச்சர்கள் ராமேஸ்வர் பாஸ்வான் மற்றும் பகவான் சிங் குஷ்வாஹா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரன்விஜய் சிங் மற்றும் சுமித் குமார் சிங், கட்சியின் மகளிர் பிரிவின் முன்னாள் மாநில பிரிவு தலைவர் காஞ்சன் குமாரி குப்தா, பிரமோத் சிங் சந்திரவன்ஷி, அருண் குமார், தாஜம்முல் அம்ரேஷ் சவுத்ரி, சிவ்ஷங்கர் சவுத்ரி, சிந்து பாஸ்வான், கர்த்தார் சிங் யாதவ், ராகேஷ் ரஞ்சன், மற்றும் முங்கேரி பாஸ்வான் ஆகியோர் ஆவார்கள்.
பிகார் மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?