தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிதிஷ் குமார் ஒரு குழப்பவாதி, காங்கிரஸ் தாக்கு! - நிதிஷ் குமார் ஒரு குழப்பவாதி, காங்கிரஸ் தாக்கு!

பாட்னா: கரோனா நெருக்கடி நேரத்தில் நிதிஷ் குமார் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார். அவர் ஒரு குழப்பவாதி என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரஞ்சீத் ரஞ்சன் கூறியுள்ளார்.

Ranjeet Ranjan  Bihar  Nitish Kumar  Congress  நிதிஷ் குமார் ஒரு குழப்பவாதி, காங்கிரஸ் தாக்கு!  பிகார் கரோனா பாதிப்பு, கோவிட்-19, ரஞ்சீத் ரஞ்சன், காங்கிரஸ், பாஜக
Ranjeet Ranjan Bihar Nitish Kumar Congress நிதிஷ் குமார் ஒரு குழப்பவாதி, காங்கிரஸ் தாக்கு! பிகார் கரோனா பாதிப்பு, கோவிட்-19, ரஞ்சீத் ரஞ்சன், காங்கிரஸ், பாஜக

By

Published : May 6, 2020, 1:12 AM IST

காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரஞ்சீத் ரஞ்சன், ஈடிவி பாரத்துக்கு அளித்த பேட்டியில், “நிதிஷ் குமார் ஒரு குழப்பவாதி. நெருக்கடி காலத்தில் அவரால் செயல்பட முடியவில்லை” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “கரோனா ஏற்படுத்திய நெருக்கடியில் நிதிஷ் குமார் குழப்பவாதி போல் செயல்பட்டுவருகிறார். இச்சூழலில் பிகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல நெருக்கடிகளை சந்தித்துவருகின்றனர். அவர்களை சொந்த ஊருக்கு திரும்ப அழைத்து வர அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் உணவுக்கே பணமில்லாத போது அவர்களால் எவ்வாறு சொந்த ஊருக்கு திரும்ப பணம் இருக்கும்?

மாநிலத்தில் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனை சமாளிக்க முடியாமல், மாநிலத்தை கடவுளிடம் விட்டுவிட்டார். அவரது கட்சியும் (ஒருங்கிணைந்த ஜனதா தளம்), தோழமை கட்சியும் (பாஜக) மக்களுக்கு என்ன செய்தது? பிகாரை மத்திய அரசிடம் நிதிஷ் அடகு வைத்துவிட்டார். கரோனா வைரஸூக்கு மாநிலத்தில் சுகாதாரப் பணியாளர்களும் உயிர் இழந்துள்ளனர்.

அவர்களின் உயிர்களை நிதிஷ் அரசு பாதுகாக்கவில்லை. மத்திய அரசிடமிருந்து மாநிலத்துக்கு தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்களை அதிகமாக பெற வேண்டும்” என்றார்.

பிகாரில் 517 பேர் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உயிரிழப்பு நான்கு ஆக உள்ளது.

இதையும் படிங்க: கெஜ்ரிவால் அரசு மீது மனோஜ் திவாரி தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details