சுயசார்பு கொள்கையை அமல்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "கரோனாவால் மக்களிடையே எதிர்மறையான உணர்வு நிலவி வருகிறது. மக்களிடையே நேர்மறையான உணர்வை விதைக்க கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல வேண்டும். எனவே, இறக்குமதியைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு, ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுய சார்புக் கொள்கையை அமல்படுத்த நாடு தயாராகி வருகிறது.