தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒரே நாடு ஒரே ஃபாஸ்டாக்' மாநாடு இன்று தொடக்கம்! - ஃபாஸ்டாக் மாநாட்டை நாளை தொடங்கி வைக்கிறார் நிதின் கட்கரி

டெல்லி: 'ஒரே நாடு ஒரே ஃபாஸ்டாக்' மாநாட்டை, மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைக்கிறார்.

nitin-gadkari

By

Published : Oct 14, 2019, 8:32 AM IST

ஃபாஸ்டாக் என்பது டெபிட் கார்டு, கிரிடிட் கார்ட் போன்ற ஒருவகை கார்டு வகை ஆகும். இந்த ஃபாஸ்டாக் கார்டில் பணம் செலுத்திகொள்ளலாம். அப்படி செலுத்துவதன் மூலம் சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்திக் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதற்கான கட்டணம் உங்கள் ஃபாஸ்டாக் கார்டில் இருந்து தானாக எடுத்துக்கொள்ளப்படும்.

இத்திட்டத்தை நாடு முழுவதும் அமுல்படுத்த மத்திய அரசு சார்பில் இன்று மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைக்கிறார். மேலும் இதில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், மத்திய, மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் மின்னணு ஃபாஸ்டாக் கார்டு மூலம் சுங்க கட்டண நடைமுறையை அமுல்படுத்தல், அரசுத்துறைகள் அல்லது அரசுசாரா அமைப்புகளுடன் சேர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். மேலும், இந்த ஃபாஸ்டாக் கார்டை ஜிஎஸ்டியுடன் இணைக்க ஏற்கனவே ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி உறுதி - நிதின் கட்கரி அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details