2014 ஆம் ஆண்டு தேர்தலில் மஹாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிதின் கட்காரி, கப்பல் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத்துறை ஆகியவற்றுக்கு அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
நிதின் கட்காரி மத்திய அமைச்சராக பதவியேற்பு! - oath taking
டெல்லி: கப்பல், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக கடந்த முறை பதவி வகித்த நிதின் கட்காரி இன்று மீண்டும் மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நிதின் கட்காரி
இந்நிலையில், 17-வது மக்களவைத் தேர்தலில் மீண்டும் நாக்பூர் தொகுதியில் வெற்றிபெற்றுள்ள அவர், இன்று மீண்டும் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.