தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'எவ்வளவு தடைகள் வந்தாலும் மீண்டுவரும் திறன் பெண்களிடம் உள்ளது' - நம்பிக்கையூட்டிய நிர்மலா சீதாராமன்! - பெண்களுக்கு நிர்மலா சீதாராமன் கோரிக்கை

டெல்லி: பெண்கள் ஆறுதலான வாழ்வில் இருந்து, வெளியில் வந்து பல சவால்களை முன்னெடுக்கவேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Women do not need token participation: Sitharaman

By

Published : Sep 25, 2019, 11:39 AM IST

டெல்லியில் ஆர்எஸ்எஸ் இணைப்பு நிறுவனமான திருஷ்டி ஸ்ட்ரி அத்யாயன் பிரபோதன் கேந்திரா(DSAPK) நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பெண்கள் முன்னேற்றம் குறித்த உரையாற்றினார்.

இதில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் இணைப்பு நிறுவனமான டிஎஸ்ஏபிகே அரசுடன் இணைந்து பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. நக்சல்களால் பாதிக்கப்பட்ட பல்வேறு பெண்களை இந்த அமைப்பு மீட்டுள்ளது எளிதான காரியமல்ல என்றார்.

மேலும் பேசிய நிர்மலா சீதாராமன், ’எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றிலிருந்து மீண்டுவரும் திறன் பெண்களிடம் உள்ளது. எனவே, பெண்கள் தங்களது ஆறுதலான வாழ்வில் இருந்து, வெளியில் வந்து பல சவால்களை முன்னெடுக்கவேண்டும்

உடல்நலம், சமவாய்ப்பு, சுதந்திரமாக பேசும் உரிமை உள்ளிட்ட சில காரணிகள் பெண்களை பொது நிகழ்வுகளில் பங்கேற்க தடுத்தாலும், அவர்கள் தன்னம்பிக்கைக் கொண்டு மீண்டுவர முயலவேண்டும்’ என்றார். அதுமட்டுமின்றி, பெண்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க யாருடைய அனுமதியையும் பெற தேவையில்லை எனவும் அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அமைப்பு நிறுவனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: ‘பெண்களுக்கான இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படும்’ - நிர்மலா சீதாராமன் பேட்டியின் முக்கிய குறிப்புகள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details