தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சசிதரூரை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்த நிர்மலா சீதாராமன் - tiruvanadhapuram

திருவனந்தபுரம்: தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூரை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

நிர்மலா சீதாராமன்

By

Published : Apr 16, 2019, 10:50 AM IST

Updated : Apr 16, 2019, 12:50 PM IST

திருவனந்தபுரம் மக்களைவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் அதே தொகுதியில் அமைந்துள்ள கந்தாரி அம்மன் கோவிலுக்கு நேற்று காலை வழிபடச் சென்றார்.

அப்போது சசிதரூர் கோவிலில் உள்ள துலாபரத்தில் ஏறி அமர முற்படும்போது, எடை தாங்காமல் துலாபரம் உடைந்தது. இதனால் சசி தரூரின் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்ட சிகிச்சையளிக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசி தரூரை, பாஜகவைச் சேர்ந்தவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் நேரில் சென்று நலம் விசாரித்தார். இது குறித்து சசி தரூர் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

"கடுமையான தேர்தல் பணிகளுக்கு மத்தியில் இன்று காலை நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் என்னை நேரில் சந்தித்தார்.

இந்திய அரசியலில் அரிதாக நடைபெற்ற இந்த நிகழ்வை ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவரின் மூலம் நான் பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

காயமடைந்த சசிதரூர்
Last Updated : Apr 16, 2019, 12:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details