தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

#BharatiyaJokeParty: நெட்டிசன்களை உசுப்பிவிட்ட நிதியமைச்சரின் ஒற்றை பேட்டி! - பாஜக

ஓலா, உபர் வருகையால்தான் ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தது நெட்டிசன்களுக்கு கன்டென்டாக மாறியிருக்கிறது.

Nirmala sitharaman

By

Published : Sep 11, 2019, 7:58 PM IST

ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திந்து வருவது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அதில் அவர், இன்றைய கால இளைஞர்கள் மத்தியில் வாகனம் வாங்கும் ஆசை குறைந்துள்ளது. அவர்கள் ஓலா, உபரில் செல்வதையே விரும்புகிறார்கள், மெட்ரோ ரயில் சேவையை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதுதான் ஆட்டோமொபைல் துறை சரிவை சந்திக்கக் காரணம் என தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சு வெறும் வாயோடு இருந்த நெட்டிசன்களுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது. செம கலாய் கலாய்க்கிறார்கள்... அவர்கள் கூடவே காங்கிரஸும் இணைந்துகொண்டது.

இளைஞர்கள் ஜீன்ஸ் துவைக்காத காரணத்தால்தான் சர்ஃப் எக்செல் விற்பனை சரிந்து வருகிறது

நிர்மலா ட்ரோல் - 1

வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க காரணம் இளைஞர்கள் நெட்பிலிக்ஸ் பார்ப்பதுதான்...

நிர்மலா ட்ரோல் - 2

இளைஞர்கள் பானி பூரி திண்பதால்தான் பெல் நிறுவனம் சரிவை சந்தித்து வருகிறது...

நிர்மலா ட்ரோல் - 3

#BharatiyaJokeParty என்ற ஹேஷ்டேக்கில் நிர்மலா சீதாராமனை கலாய்த்து இப்படி பதிவிட்டு வருகின்றனர். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் 5ஆவது இடத்தில் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details