பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது ஜெயப்பிரதாவை இழிவாக பேசிய சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், அரசியல்வாதிகள் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதற்கு முன்னர் யோசிக்க வேண்டும் எனக் கூறினார்.
அரசியல்வாதிகள் பேசுவதற்கு முன் யோசியுங்கள் - நிர்மலா சீதாராமன் அறிவுரை - azamkhan
டெல்லி: அரசியல்வாதிகள் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதற்கு முன் யோசியுங்கள் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், மற்ற விஷயங்கள் பற்றி பேசுவதை விட பெண்களை தாக்கி பேசுவது எளிதான ஒன்று. இது 100 சதவீதம் உண்மையும் கூட. எந்த விஷயத்தை பற்றி கூறும் போதும் நம் உதட்டிலிருந்து வெளிவரும் வார்த்தைகளை மிக கவனமாக பேச வேண்டும் என நான் எண்ணுகிறேன் எனக் கூறினார்.
முன்னதாக அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி சார்பில் ராம்பூர் மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் அசாம்கான், ஜெயபிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ராம்பூருக்கு ஜெயபிரதாவை நான்தான் அழைத்து வந்தேன். அவரை யாரும் சீண்டாமல் நான் பார்த்து கொண்டதற்கு நீங்கள்தான் சாட்சி. அவரது உண்மை முகத்தை அறிவதற்கு உங்களுக்கு 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், நான் 17 நாட்களிலேயே அவர் காக்கி நிற உள்ளாடை அணிந்திருந்தார் என்பதை தெரிந்து கொண்டேன் எனக் கூறியது சர்ச்சையை கிளப்பியது.