தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உச்சநீதிமன்றத்தை அவமதிக்கிறார் ராகுல்காந்தி- நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு - supreme court

டெல்லி: ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துக்களை ராகுல்காந்தி அவமதிக்கிறார் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

nirmala seetharaman

By

Published : Apr 10, 2019, 6:58 PM IST

ரபேல் ஒப்பந்த ஊழல் வழக்கில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இதையடுத்து ரபேல் ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்த நிலையில், ரபேல் குறித்து வெளியான ஆவணங்கள் சட்டவிரோதமானது என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "ரபேல் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்துகளை ராகுல்காந்தி திரித்து கூறுகிறார். ராகுல்காந்தியின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ரபேல் குறித்து வெளியான ஒரு சில ஆவணங்களும் சட்டவிரோதமான முறையில் வெளியாகின" எனக் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details