தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பணவீக்கம் அதிகரிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் தகவல் - பணவீக்கம்

கொல்கத்தா: மத்தியில் பாஜக ஆட்சி அமைத்ததிலிருந்து பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Nirmala Sitharaman

By

Published : Sep 6, 2019, 11:59 PM IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 30ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விவரங்கள் குறித்து பேசினார். அதில், ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்கான காலாண்டில் வளர்ச்சி ஐந்து விழுக்காடாக குறைந்துள்ளது என அறிவித்திருந்தார். இது, ஏழு அண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான வளர்ச்சியாகும். இதுகுறித்து, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பழிவாங்கும் செயலில் ஈடுபடாமல் பொருளாதாரத்தை மீட்டெடுத்து பணவீக்கத்தைக் குறைக்க அறிவுரை கூறினார்.

நிர்மலா சீதாராமன்

இதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "2014ஆம் ஆண்டிலிருந்து பணவீக்கம் அதிகரிக்கவில்லை. இதுகுறித்து நீங்கள் பேச விரும்பினால், 2008-16ஆம் ஆண்டு வரையிலான பண வீக்க விவரங்களை எடுத்து பார்க்க வேண்டும். எங்கள் அரசுக்கு எதிராக பணவீக்கம் தொடர்பாக நீங்கள் கேள்வி எழுப்ப முடியாது. நாங்கள் அதனை கட்டுக்குள் வைத்துள்ளோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details