தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: கருணை மனுவை நிராகரிக்க தாயார் கோரிக்கை!

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளியின் கருணை மனுவை நிராகரிக்க கோரி நிர்பயாவின் தாயார் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Mercy
Mercy

By

Published : Dec 6, 2019, 11:31 PM IST

டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவரில் ஒருவர் 16 வயதிற்குள்பட்ட சிறுவன் என்பதால் மூன்றாண்டுகள் சீர்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்து விட்டபின் விடுவிக்கப்பட்டார்.

மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. பின்னர், மூன்று பேர் திகார் சிறையிலும் ஒருவர் மண்டோலியில் உள்ள சிறைச்சாலையிலும் தண்டனையை அனுபவித்துவருகின்றனர்.

இதையடுத்து தூக்க தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வினய் சர்மா தண்டனையை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தார். இந்நிலையில், அந்த கருணை மனுவை நிராகரிக்கக் கோரி நிர்பயாவின் தாயார் சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கடிதத்தில், "தூக்கு தண்டனையை காலதாமதம் செய்து நீதியை மறுக்கவே கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆயிற்று. பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மிகுந்த மன வேதனையும் வலியும் இந்த கால கட்டத்தில் அனுபவித்துள்ளார். நீதி நிலைநாட்டப்படும் என பல நாள்களாக காத்துக்கொண்டிருக்கிறார். எனவே, கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உன்னாவ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் உயிருக்குப் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details