2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற இளம்பெண் கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட ஐந்து பேரில் ஒருவர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மீதமுள்ள நால்வருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த வழக்கின் மீதான இன்னொரு சீராய்வு மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நிர்பயா தயார் ஆஷா தேவி தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், உச்ச நீதிமன்றம் நிர்பயா மீதான தண்டனை உத்தரவை பிறப்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன, அவற்றின் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 18 மாதங்கள் ஆகின்றன. அதனால் இந்த வழக்கின் மீது கவனம் செலுத்தி குற்றவாளிகளை உடனடியாக தூக்கிலிட வேண்டும் என மத்திய அரசிற்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.