டெல்லியில் 2012ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி. தனது மகளுக்கு நடந்த அநீதிக்கு எதிராகத் தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்திவருகிறார்.
இந்நிலையில், ஆஷா தேவி காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார் என்றும் காங்கிரஸ் சார்பாக போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் பிரமுகருமான கீர்த்தி ஆசாத், ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.
டெல்லியில் அடுத்த மாதம் 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் கீர்த்தி ஆசாத்தின் இந்தக் கருத்து காட்டுத் தீப்போன்று பரவத் தொடங்கியது. இதனை நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.