டெல்லியில் 2012ஆம் ஆண்டு ஆறு நபர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மூர்க்கமாக தாக்கப்பட்டார் நிர்பயா எனும் மருத்துவக் கல்லூரி மாணவி. இந்தக் கொடூர சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் குற்றவாளிகளில் 18 வயதுக்குக் கீழிருந்த சிறுவன் ஒருவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான். அதில் ராம் சிங் என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் சிறையில் தூக்கில் தொங்கினார்.
குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்!
டெல்லி: உன்னாவ் வழக்கு குற்றவாளி குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார்.
அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அக்ஷய் குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்றி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், எங்களுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம். உன்னாவ் வழக்கு குற்றவாளி குல்தீப் செங்கார், நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேர் ஆகியோருக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவது இந்த சமூகத்துக்கு அழுத்தமான செய்தியை பதிவு செய்யும் விதமாக அமையும் என கூறியுள்ளார்.