நிர்பயா வழக்கில் அக்ஷய் சிங் தாகூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் நாளை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
இதனிடையே, அக்ஷய் சிங் தாகூரின் மனைவி புனிதா தேவி பீகார் மாநிலம் அவுரங்காபாத் நீதிமன்றத்தில், ''நான் வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாக வாழ விருப்பமில்லை. அதனால் எனக்கு விவாகரத்து வழங்கவேண்டும்'' என மனுதாக்கல் செய்துள்ளார். மார்ச் 12ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.