தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லும் நிர்பயா குற்றவாளிகள்! - நிர்பயா குற்றவாளிகள்

டெல்லி: தூக்கு தண்டனையை எதிர்த்து நிர்பயா வழக்கு குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளனர்.

Nirbhaya
Nirbhaya

By

Published : Mar 16, 2020, 5:43 PM IST

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் மார்ச் 20ஆம் தேதி தூக்கிலிடப்படவுள்ள நிலையில், அக்ஷ்ய் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோர் தூக்கு தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை நீதிமன்றமே சர்வதேச நீதிமன்றமாகும்.

முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம் கோவிந்திடம் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் கருணை மனுவை தாக்கல் செய்திருந்தனர். ஆனால், அதனை அவர் நிராகரித்திருந்தார். இதையடுத்து, கருணை மனுவில் முழுமையான தகவல் அளிக்கவில்லை எனக் கூறி, அக்சய் சிங் மீண்டும் கருணை மனுவை தாக்கல் செய்தார். ஆனால், அதனையும் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். குற்றவாளிகளின் சீராய்வு மனு, குறைதீர்வு மனு ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details