தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளார். குற்றவாளிகள் அனைவரும் மார்ச் 3ஆம் தூக்கிலிடப்படவுள்ள நிலையில், பவன் குப்தா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பவன் குப்தாவை தவிர மற்ற குற்றவாளிகள் அனைவரும் மறு சீராய்வு, கருணை மனு ஆகியவற்றை தாக்கல் செய்தனர். ஆனால் முகேஷ், வினய், அக்ஷய் ஆகியோரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.