நிர்பயா கொலைக் கைதி வினய், டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை கடந்த சனிக்கிழமை அளித்திருந்தார். அந்த மனுவில் தமது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தலை, தோள்பட்டையில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல்நீதிபதி தர்மேந்திரா ரானா, வினயின் மனு மீது திகார் சிறை நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இது குறித்து திகார் சிறை நிர்வாக வட்டார தகவல்கள், “வினய் தனது கையைத் தானே காயமுற செய்தார். மேலும் சிறைச்சுவரில் தலையால் முட்டிக்கொண்டார்” எனக் குறிப்பிடுகின்றன.