தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு எதிராக களமிறங்கிய தாயார்!

டெல்லி: குற்றவாளியின் மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யுமாறு நிர்பயாவின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்துள்ளார்.

Nirbhaya
Nirbhaya

By

Published : Dec 13, 2019, 4:12 PM IST

டெல்லியில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி நிர்பயா என்பவர் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இறுதியில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துவந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவரில் ஒருவர் 16 வயதிற்குள்பட்ட சிறுவன் என்பதால் மூன்றாண்டுகள் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்தபின் விடுவிக்கப்பட்டார்.

மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை டெல்லி உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. பின்னர், மூன்று பேர் திகார் சிறையிலும் ஒருவர் மண்டோலியில் உள்ள சிறைச்சாலையிலும் தண்டனையை அனுபவித்துவருகின்றனர்.

இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான வினய் சர்மா தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். மற்றொரு குற்றவாளியான அக்‌ஷய் குமார் சிங், தூக்கு தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மறு சீராய்வு மனுவை ரத்து செய்யக்கோரி நிர்பயாவின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கைவிடுத்துள்ளார்.

முன்னதாக, மூன்று குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுக்களை ஜூலை 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: ராகுல் காந்தியின் பேச்சை சர்ச்சைக்குள்ளாக்கிய பாஜக? - களமிறங்கிய கனிமொழி

ABOUT THE AUTHOR

...view details