தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத்தண்டனையை லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும்!'

டெல்லி: நிர்பயா வழக்கின் குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்போது, அதை தொலைக்காட்சிகளில் நேரலை காணொலி மூலம் பொது மக்களுக்குக் காட்ட வேண்டும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை
தூக்கு தண்டனை

By

Published : Dec 13, 2019, 8:56 PM IST

நிர்பயா வழக்கின் நான்கு குற்றவாளிகளுக்கு இன்னும் ஒரு மாதத்தில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'அவர்களின் தூக்குத் தண்டனையை தொலைக்காட்சிகளில் நேரலை காணொலி மூலம் பொது மக்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்' இன்று பொது நல வழக்கை ஒருவர் தாக்கல் செய்துள்ளார்.

மேலும் 'அவர்களைத் தூக்கிடும் கயிற்றின் செலவைக் குற்றவாளிகளின் குடும்பத்திடம் அரசு பெற்றுக் கொள்ள வேண்டும்; இது அவர்களின் குடும்பத்திற்கு ஒரு பாடமாக அமையும்' என அதில் கூறப்பட்டிருந்தது.

டெல்லியில் 2012ஆம் ஆண்டு 23 வயது மருத்துவ மாணவி நிர்பயாவை ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தனர். அதில் 16 வயது சிறுவன் ஒருவர் சீர்த்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்தபின் விடுவிக்கப்பட்டார். மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள நான்கு பேருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தூக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு எதிராக களமிறங்கிய தாயார்!

ABOUT THE AUTHOR

...view details