தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு; ’பெண்களின் பாதுகாப்புக்கு இந்திய ஆண்களும் குரல் கொடுத்த முதல் நிகழ்வு’

நிர்பயா வழக்கில் தான் முதல் முதலாக பெண்களின் பாதுகாப்புக்காக இந்திய ஆண்களும் குரல் கொடுத்தனர் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Union Minister for women and child welfare Smriti Irani
Union Minister for women and child welfare Smriti Irani

By

Published : Sep 10, 2020, 7:56 PM IST

ஹைதராபாத்தில் நடைபெற்ற சிஐஐ- இந்திய பெண்கள் வலையமைப்பு மாநாட்டில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். பெண்களின் பலம் என தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டில் அவர் பேசியதோடு, கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது; 2012ஆம் ஆண்டு இந்தியாவில் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் ஆண்களிடையேயும் சம அளவிலான கோபத்தை ஏற்படுத்தியது. இந்தியா கேட் புல்வெளிகளில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் குழந்தைகள், சகோதரிகள், மனைவியரிடம் ஆதங்கப்பட்டனர். இது குறித்தும் சட்ட ஒழுங்கு குறித்தும் விவாதித்தனர். பெண்களின் பாதுகாப்புக்கு இந்திய ஆண்கள் குரல் கொடுத்த முதல் நிகழ்வு இது. ஏழு வருடங்களுக்கு பின்னர் ஆறு நபர்களில் நான்கு பேர் தூக்கிலிடப்பட்டனர்.

இதுவே பெண்களின் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்து ஒரு இந்திய பிரஜை எப்படி உணருகிறான் என்பதற்கான முதல் சாட்சி. நிர்பயா வழக்குக்கு முன் இந்தியாவின் தெருக்களில் இப்படியொரு உணர்வு சார்ந்த வெளிப்பாடு இருந்ததில்லை. வெற்றிக்கு ஏதும் தனி செய்முறையோ அல்லது டெம்ளேட்டோ கிடையாது. வெற்றிக்கான உள்கட்டமைப்பு உங்களிடம் இருந்தால் வெல்ல முடியும்” என்றார்.

இதையும் படிங்க:நிர்பயா பெயரில் குறும்படம் வெளியிட்ட ஈரோடு இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details