தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: குற்றவாளிக்கு சட்ட உதவி வழங்க முன்வந்த நீதிமன்றம் - Delhi court offers death row convict legal aid

தனக்கு வழக்கறிஞர் இல்லை என நிர்பயா வழக்கு குற்றவாளி கூறியதையடுத்து, அவருக்கு சட்ட உதவி வழங்க டெல்லி நீதிமன்றம் முன்வந்தது.

Delhi court offers Nirbaya death row convict legal aid
Delhi court offers Nirbaya death row convict legal aid

By

Published : Feb 12, 2020, 6:45 PM IST

நிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா, தனக்கென்று வழக்கறிஞர் இல்லை எனக் கூறியதைத் தொடர்ந்து, அவருக்கு சட்ட உதவி வழங்க டெல்லி நீதிமன்றம் முன்வந்தது.

தனது முந்தைய வழக்கறிஞரை நீக்கிவிட்டதாகவும், புதிய வழக்கறிஞரை வழக்கில் ஈடுபடுத்த நேரம் தேவை என்றும்; பவன் குப்தா கூறியதையடுத்து, கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா அதிருப்தி தெரிவித்தார்.

நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவதற்கான, புதிய தேதியை வழங்குவதற்காக விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, குற்றவாளிகளுக்கு புதிய மரண தண்டனை உத்தரவு கோரி, நிர்பயாவின் பெற்றோரும் நேற்று நீதிமன்றத்தை நாடியிருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் 22ஆம் தேதியில் முதன்முதலாக குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜனவரி 17ஆம் தேதியிலேயே தண்டனையை பிப்ரவரி 1ஆம் தேதியில் நிறைவேற்றக்கோரி உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது வரை, நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்ற தேதி உறுதிசெய்யப்படவில்லை என குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :'காங்கிரசில் இணையவில்லை!' - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிர்பயா தாயார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details