நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால், குற்றவாளி முகேஷின் கருணை மனு நிலுவையிலிருந்த காரணத்தால் தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 1ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
மற்றொரு குற்றவாளியின் மனு ஒன்று நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த காரணத்தால், மீண்டும் தூக்கு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளி முகேஷ் குமார் சிங் சார்பாக ஆஜராக வழக்கறிஞர் விரிந்தா குரோவர் என்பவரை நீதிமன்றம் நியமித்திருந்தது. ஆனால், அதற்கு முகேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.