தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல்! - Nirbhaya case

டெல்லி: நிர்பயா பாலியல் குற்றவாளி முகேஷ்சிங்கின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

By

Published : Jan 27, 2020, 4:44 PM IST

2012ஆம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்துகொல்லப்பட்ட வழக்கில், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தரப்பிலிருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்டது.

தண்டனைக் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிவிட்டு, தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றத்தில் கோரிக்கைவைத்தார். ஆனால் குடியரசுத் தலைவர் உடனடியாகக் கருணை மனுவை நிராகரித்தார். இதையடுத்து அவரது மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நான்கு பேருக்கும் 2020 பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்றிவிட வேண்டும் என டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் தன் கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக முகேஷ் சிங் கடந்த சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு அவரது வழக்கறிஞர், தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கைவைத்தார். இதனை ஏற்ற நீதிபதி, வழக்கை பட்டியலிடுவது குறித்து பதிவாளரை அணுகுமாறு தெரிவித்துள்ளார். இன்னும் நான்கு நாள்களில் தூக்கிலிடப்பட உள்ள ஒருவரது மனுவை விட அவசரமானது எதுவுமில்லை எனவும் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுகிறார் பவன் ஜலாட்!

ABOUT THE AUTHOR

...view details