தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பவன் குமார் குப்தா புதிய மனு!

டெல்லி: நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார்.

Nirbhaya case: Convict moves SC against HC's order rejecting his juvenility claim
Nirbhaya case: Convict moves SC against HC's order rejecting his juvenility claim

By

Published : Jan 17, 2020, 10:22 PM IST

நிர்பயா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் குற்றவாளி ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக டெல்லி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு அளித்தார்.

அந்த மனுவை அளித்தவர் குற்றவாளிகள் நால்வரில் ஒருவரான பவன் குமார் குப்தா ஆவார். அந்த புதிய மனுவில், குற்றம் நடந்தபோது தாம் சிறார் (18 வயதுக்குட்பட்டவர்) எனக் கூறியிருந்தார்.

எனினும் வயது தொடர்பாக எவ்வித ஆவணங்களையும் அவர் தாக்கல் செய்யவில்லை என கூறப்படுகிறது. நிர்பயா பாலியல் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரையும் வருகிற 22ஆம் தேதி திகார் சிறையில் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் அவர் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களது தண்டனை நிறைவேற்றம் தேதி அடுத்த மாதம் 1ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'காங்கிரசில் இணையவில்லை' - நிர்பயா தாயார்

ABOUT THE AUTHOR

...view details