பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி செய்த மோசடிதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய வங்கி கடன் மோசடியாக கருதப்படுகிறது. முறைகேடாக கடன் உத்தரவாத கடிதங்களை வங்கியில் பெற்று, அதைக்கொண்டு சுமார் ரூ.13,000 கோடி வரை நீரவ் மோடி கடன் பெற்றார்.
கடந்த ஜனவரி மாதம்தான் இந்த மோசடி வெளியுலகத்துக்குத் தெரியவந்தது. ஆனால், அதற்கு முன்னரே நீரவ் மோடி இங்கிலாந்து தப்பிச் சென்றுவிட்டார். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகிய அமைப்புகள் விசாரணை நடத்திவருகிறது.