தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லண்டனில் கைதானார் மோசடி மன்னன் நிரவ்மோடி - வைரவியாபாரி

ஹைதரபாத்: இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி மோசடி செய்து லண்டனில் பதுங்கியிருந்த வைர வியாபாரி நிரவ் மோடியை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

நிரவ் மோடி

By

Published : Mar 20, 2019, 6:16 PM IST

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில், தன் உறவினர் மெஹுல் சோக்சியுடன் சேர்ந்து, 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. முறைகேடு வெளியில் தெரிந்ததையடுத்து இருவரும் வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டனர். இருவரையும் பிடிக்க, சர்வதேச போலீசான, 'இன்டர்போலின்' உதவியை, இந்திய சி.பி.ஐ., நாடியது.

இந்நிலையில், பிரிட்டனில் நிரவ் மோடி பதுங்கியிருப்பது தெரியவந்ததையடுத்து அவரை, இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், நிரவ் மோடி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதை, தி டெலிகிராஃப் பத்திரிகை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து நிரவ் மோடிக்கு எதிராக லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 18ம் தேதி கைது வாரன்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை இன்று கைது செய்தனர். அவரை லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நிரவ் மோடி கைதை தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details