தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயம் செழிக்க சபரிமலையில் 'நிரப்பூத்தரி' விழா - agriculture festival

சபரிமலை: விவசாயம் செழிக்க வேண்டி புதிதாக விளைந்த நெல்லை இறைவனுக்கு படைக்கும் 'நிரப்பூத்தரி' விழா சபரிமலையில் கொண்டாடப்பட்டது.

niraputhari

By

Published : Aug 8, 2019, 1:42 PM IST

தமிழரின் திருநாள் எனச் சிறப்புடன் கொண்டாடப்படுவது தைப்பொங்கல் பண்டிகை. புதிதாக விளைந்த நெல்லை இயற்கை கடவுளாகக் கருதப்படும் சூரியனுக்கு அர்ப்பணித்து நன்றி தெரிவிக்கும் பொங்கல் விழா ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் விமரிசையாகக் கொண்டாடுவது வழக்கம்.

இதுபோன்று கேரளாவில் உள்ள கொல்லங்கோடு அச்சன் கோவில், பாலக்காடு போன்ற பகுதிகளில் புதிய விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் நிரப்பூத்தரி விழா தற்போது கொண்டாடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் விளைந்துள்ள புது நெல்லை சபரிமலை ஐயப்பன் கோயில், திருவனந்தபுரம் அனந்தபத்மநாப சுவாமி கோயில், குருவாயூர் கிருஷ்ணன் கோயில் போன்ற முக்கிய தலங்களுக்குக் கொண்டுசென்று சமர்ப்பித்து நிவேதனம் அளிக்கின்றனர்.

சபரிமலையில் நிரப்பூத்தரி திருவிழா

தங்களை விளைச்சலின் முதல் பகுதியை இறைவனுக்குப் படைத்து தனது நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதன் மூலம் விவசாயம் செழித்தோங்கும் என்பது அப்பகுதியைச் சேர்ந்த மக்களின் நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்த விழாவுக்கான சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகள் நிறைவடைந்ததும் கோயிலின் நடையானது அன்றிரவே மூடப்பட்டது.

புதிய நெல்லை கொண்டு செல்லும் பக்தர்கள்

ABOUT THE AUTHOR

...view details