தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெற்றோர் மொபைல் வாங்கித் தராததால் உயிரை மாய்த்துக் கொண்ட 9ஆம் வகுப்பு மாணவன்! - உயிரை மாய்த்துக் கொண்ட 9ஆம் வகுப்பு மாணவன்

ஹைதராபாத்: தெலங்கானாவைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர், தனது பெற்றோர் மொபைல் வாங்கித் தராத விரக்தியில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் மொபைல் வாங்கி தராததால் உயிரை மாய்த்துக் கொண்ட 9ஆம் வகுப்பு மாணவன்!
பெற்றோர் மொபைல் வாங்கி தராததால் உயிரை மாய்த்துக் கொண்ட 9ஆம் வகுப்பு மாணவன்!

By

Published : Oct 26, 2020, 5:59 PM IST

தெலங்கானா மாநிலம், ஜாகித்யாலா மாவட்டம், திர்மலாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ரகு பிரசாத். சில நாள்களுக்கு முன்னதாக ஆன்லைன் வகுப்பிற்காக தனது பெற்றோரிடம் மொபைல் கேட்டுள்ளார்.

அதற்கு மாணவரிடம், தசரா விழாவின் போது வாங்கித் தருவதாக அவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் தசரா விழாவை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருந்த ரகுபிரசாத், நேற்று தெலங்கானாவில் தசரா விழா கொண்டாடப்பட்டதையடுத்து தனது பெற்றோரிடம் மொபைல் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது, பருத்தி விற்ற பிறகு வரும் பணத்தில் மொபைல் வாங்கித் தருவதாக மாணவர் ரகுவின் தந்தை தெரிவித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவன் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...சாத்தான்குளம் வழக்கு: ரத்தம் சொட்ட சொட்ட துன்புறுத்திய காவலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details