தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சபரிமலை வழக்கு: 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று விசாரணை

டெல்லி: சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Nine-judge SC bench to hear issue of women's entry in Sabarimala temple from Jan 13
Nine-judge SC bench to hear issue of women's entry in Sabarimala temple from Jan 13

By

Published : Jan 13, 2020, 8:53 AM IST

கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றை வழங்கியது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சுமார் 60 மறுசீராய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கடந்தாண்டு வழக்கை ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தான கவுடர், நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். காவை, சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கோடு இணைத்து இஸ்லாமிய பெண்கள், பார்சி இன பெண்கள் சந்திக்கும் பாலின பாகுபாடு குறித்தும் நீதிபதிகள் விசாரிக்கவுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details