ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜே.கே. லோன் அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து குழந்தைகளின் உறவினர்கள் தெரிவிக்கையில், மருத்துவமனையின் அலட்சியத்தின் காரணமாகத்தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளன என்றனர். ஆனால், குழந்தைகளின் இந்தத் திடீர் இறப்பிற்குக் காரணம் எது என்று தெரிவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும், குழந்தைகளின் இந்தத் திடீர் இறப்பைக் கண்டறிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஏ.சி.சி. துலாராவின் அறிவுறுத்தலின்பேரில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.