சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் போரம்தியோ வனவிலங்கு சரணாலயத்தில் காட்டெருமை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, விசாரணையை தொடங்கிய வனத்துறையினர், காட்டெருமை சுற்றிய பகுதியில் இரும்பு கம்பி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் இது வேட்டையாடுபவர்களின் செயலாக இருக்கும் என சந்தேகித்த வனத்துறையினர், அச்சனக்மார் புலிகள் காப்பகத்தைச் சேர்ந்த ஸ்னிஃபர் நாய்கள் உதவியுடன் வேட்டைக்காரர்களைக் தேடும் வேட்டையில் களமிறங்கினர்.