தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனை; ஜம்மு காஷ்மீரில் அதிரடி சோதனை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட சோதனையில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Police
Police

By

Published : Feb 8, 2020, 4:56 PM IST

ஜம்மு காஷ்மீரில் போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நார்கோட்டிக்ஸ், பாப்பி, கஞ்சா உள்ளிட்ட பல போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முக்கியமாக, ஸ்ரீநகரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ரமேஷ் சந்தர், ரவிக்குமார், காகா ராம் உள்ளிட்ட போதை பொருள் கடத்தல்காரர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்முவில் பேருந்தில் நடத்தப்பட்ட சோதனையில் ஆறு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், தீபு சர்மா, சாஹில் சவுதிரி, அனில் சிங் ஆகிய கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரீசி மாவட்டத்தில் மூன்று கிலோ பாப்பியும் ரம்பன் மாவட்டத்தில் 40 கிலோ பாப்பியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்ட கல்வியமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details