மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் கடந்த 11ஆம் தேதி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது. பின்னர், அந்த பச்சிளம் குழந்தைக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டதில், கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ம.பி.யில்., பிறந்து 9 நாளே ஆன குழந்தைக்கு கரோனா உறுதி! - பிறந்து ஒன்பது நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கரோனா தொற்று உறுதி
இந்தூர்: பிறந்து ஒன்பது நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
coronavirus-in-indore
இதையடுத்து, அக்குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மத்திய பிரதேசம் மாநிலத்தில் மிகவும் சிறிய வயதில் (பிறந்து 9 நாளே ஆன) இந்தக் குழந்தை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது
Last Updated : Apr 19, 2020, 3:54 PM IST