புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள விமான நிலையத்தில், 500 கிலோவாட் கொண்ட சோலார் பிளாண்ட் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சோலார் பிளாண்ட் மூலம் புதுச்சேரி விமான நிலையம் முழுவதும் இனிமேல் மின்சார பயன்பாடு இருக்கும்.

இந்தத் திட்டத்தை மாநில அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், விமான நிலைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல விமான ஆணைய இயக்குநர் மாதவன், “புதுச்சேரியில் கோவிட் காரணமாக சிறிது காலம் நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை, விரைவில் தொடங்கப்படும். அதுமட்டுமல்லாது இரவு நேர விமான சேவை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது புதுச்சேரி விமான நிலைய இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நாட்டிலேயே சோலார் பிளாண்ட் தொடங்கப்பட்டுள்ள முதல் விமான நிலையம் புதுச்சேரி விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.