தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போதை பொருள் விற்பனை: நைஜீரிய இளைஞர் கைது - போதை தடுப்பு பிரிவு

ஹைதராபாத்: தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தாக நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

File Pic

By

Published : Apr 28, 2019, 1:15 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சனிக்கிழமை நைஜீரியா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதைப்பொருட்களை விற்பதாக காவல் துறையினருக்கு ரசசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் துறையினர் அந்த இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணையும் செய்துவருகின்றனர்.

விசாரணையில் அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் பெயர் ஜான் பால் ஒனேபச்சி என்பதும் தெரியவந்தது. மேலும் இவர் 2008ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தவர் ஆவார். ஏற்கனவே இவர் மீது போதை தடுப்பு பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் உள்ளன.

ஜான் பால் ஒனேபச்சி போதைப் பெருட்களை குறைந்த விலையில் கோவாவில் இருந்து வாங்கி ஹைதராபாத்தில் அதிக விலைக்கு விற்றதாகவும் தெரிகின்றனது.

இந்நிலையில் காவல் துறையினர் இவருக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு போதைப்பெருள் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details