ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புச்சட்டம் 370 நீக்கப்பட்டதையடுத்து, அம்மாநிலத்திற்குள் எதிர்க்கட்சி தலைவர்கள் யாரையும் இதுவரை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. காஷ்மீரின் முக்கிய தலைவர்கள் வீட்டுச்சிறையிலேயே வைக்கப்பட்டனர். வீட்டுக்காவலில் இருந்து வெளியேற்ற, பல்வேறு நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்திற்கு 23 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் ஐரோப்பய எம்.பி. நிக்கோலஸ் ஃபெஸ்ட் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், ''23 எம்.பி.க்களை கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவை அனுமதிக்கும் இந்திய அரசு, எதிர்க்கட்சி தலைவர்களையும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்குள் அனுமதிக்கவேண்டும். மாநிலத்தில் பிரச்னை இருக்கிறது என்றால், அதனை ராணுவத்தை வைத்து முடிவுக்கு கொண்டு முடியாது.