ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், காஷ்மீர் மாநிலத்தின் காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவேந்திர சிங்குடன் தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர ஆயுதங்களுடன் பயணம் செய்த போது காவல் துறையினர் கைது செய்தனர்.
காஷ்மீர் மாநிலத்தின் மூத்த காவல்துறை அதிகாரி பயங்கரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை இவ்வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. இந்நிலையில், ஐந்து பேர் கொண்ட தேசிய புலனாய்வு முகமை காஷ்மீருக்குச் செல்லவுள்ளது.