ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த நவின் பாபு, வழக்கறிஞர் இர்பான் மிர் ஆகியோர் தெற்கு காஷ்மீரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர்.
தவீந்தர் சிங் வழக்கை விசாரிக்க என்.ஐ.ஏ.க்கு உத்தரவு!
டெல்லி: பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தவீந்தர் சிங் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
DSP
பயங்கரவாத அமைப்புடன் தவீந்தர் சிங்குக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: சிதையும் சூரிய கனவுகள் - சிறப்புக் கட்டுரை