தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் என்ஐஏ விசாரணை! - kerala chennai gold smuggling

Nia riad  கேரள தங்கக் கடத்தல் வழக்கு  kerala gold smuggling update  kerala chennai gold smuggling  nia investigation in Chennai
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் என்ஐஏ விசாரணை

By

Published : Aug 1, 2020, 2:35 PM IST

Updated : Aug 1, 2020, 3:58 PM IST

14:26 August 01

சென்னை: கேரளா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் ஐந்து பேர் கொண்ட என்ஐஏ குழு நேற்று (ஜூலை 31) காலையிலிருந்து ரகசிய விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

கேரளாவில் சில வாரங்களுக்கு முன்பு 30 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடங்கிய நாளிலிருந்து புதுப்புது திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், கேரளா முன்னாள் முதன்மைச் செயலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட தங்கம் விற்பனை செய்யப்பட்ட இடம், அந்தப் பணம் பயன்படுத்தப்பட்டது குறித்து விசாரணை மேற்கொள்ள என்ஐஏ அலுவலர்கள் தீவிரம் காட்டிவந்தனர். 

இந்தச் சூழ்நிலையில், கடத்தல் தங்கம் சென்னையில் விற்பனை செய்யப்பட்டதாக சந்தேகம் அடைந்த என்ஐஏ அலுவலர்கள் சென்னையில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நேற்று காலை ஐந்து பேர் கொண்ட என்ஐஏ குழு, கடத்தல் தங்கம் பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க:தங்கக்கடத்தல் வழக்கு: ஆகஸ்ட் 21 வரை ஸ்வப்னா சுரேஷுக்கு நீதிமன்றக் காவல்

Last Updated : Aug 1, 2020, 3:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details