மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் தான்யா பர்வீன். இவர், பாகிஸ்தானைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள், பர்வீனை ஜூன் 12ஆம் தேதி 10 நாள்கள் காவலில் எடுத்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த குழு ஒன்று இவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் 20ஆம் தேதி தான்யா பர்வீனை காவல் துறையினர் 14 நாள்களில் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
தான்யா பர்வீன் வங்க தேசத்தைச் சேர்ந்தவர் என்றும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது.